Enable Javscript for better performance
ஹெலிகாப்டர் பேர ஊழல்:இத்தாலிக்கான இந்திய தூதருடன் சிபிஐ இயக்குநர் சந்திப்பு - Dinamani

சுடச்சுட

    

    ஹெலிகாப்டர் பேர ஊழல்:இத்தாலிக்கான இந்திய தூதருடன் சிபிஐ இயக்குநர் சந்திப்பு

    By புது தில்லி  |   Published on : 19th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொகுசு ஹெலிகாப்டர்கள் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்தியத் தூதர் பசந்த் குமார் குப்தாவை, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் ரஞ்சித் சின்ஹா கலந்து கொண்டார். அப்போது, இந்திய ராணுவத்துக்கு சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக இந்தியத் தூதர் பசந்த் குமாருடன் ரஞ்சித் சின்ஹா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் குறித்து இத்தாலி அரசிடம் இந்தியா கேட்ட தகவல்களை விரைவில் பெறுவது குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

    பின்னணி: இந்திய ராணுவத்துக்கு ரூ. 3,600 கோடிக்கு சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தலைவர் எஸ்.பி. தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டையடுத்து இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai