Enable Javscript for better performance
\\\"ஆதாரம் இல்லாததால் எம்.பி. மனைவி மீது கொலைக் குற்றம் சுமத்த முடியாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஆதாரம் இல்லாததால் எம்.பி. மனைவி மீது கொலைக் குற்றம் சுமத்த முடியாது'

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டுப் பணிப் பெண் கொலை சம்பவத்தில் முன்விரோதத்திற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்ஜய்யின் மனைவி ஜாக்ருதி சிங் மீது குற்றம் சுமத்த முடியாது என்று அவரது வழக்குரைஞர் தில்லி நீதிமன்றத்தில் வாதாடினார்.

    உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தனஞ்சய் சிங். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். தெற்கு தில்லி சௌத் அவென்யூவில் உள்ள இவரது குடியிருப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ராக்கி பத்ரா கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவரை தனஞ்ஜெய் சிங்கின் மனைவி ஜாக்ருதி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதால் இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஜக்ருதி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, கொலை முயற்சி, சட்டவிரோதமாக அடைத்துவைத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸாருக்கு தகவல் தராமல், ஆதாரங்களை அழித்ததாக தனஞ்ஜய் சிங் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரும் கைதானார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் மீதும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    தற்போது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தவதற்கான வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான விசாரணை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஜாக்ருதி சிங் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த வழக்கில், இறந்துபோன வீட்டுப் பணிப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாக்ருதி சிங்கிற்கு எவ்வித உள்நோக்கமோ முன்விரோதமோ இருந்ததற்கான ஆதாரம் ஏதும் அளிக்கப்படவில்லை. அதனால், ஜாக்ருதி மீது கொலை செய்ததாக குற்றம் சுமத்த முடியாது' என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் வாதங்களை முன்வைக்கும் அடுத்த விசாரûணையை மே 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்பி தனஞ்ஜெய் சிங், ஜான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஜாமீன் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    தில்லி அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றி வந்த ஜாக்ருதி, கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai