Enable Javscript for better performance
கஞ்சா வழக்கில் ஒருவருக்கு 4 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    கஞ்சா வைத்திருந்த வழக்கில் இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது குறித்த வழக்கு விவரம் வருமாறு: பிகாரைச் சேர்ந்தவர் முஸ்தஃபா திவான். இவர் சம்பவத்தன்று தில்லி கஷ்மீரி கேட் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பாலிதீன் பையில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தாக அப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைல் ஜெயின் அளித்த தீர்ப்பு: "குற்றம்சாட்டப்பட்ட நபர் கஞ்சா வைத்திருந்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக இரு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai