Enable Javscript for better performance
காங்கிரஸ் எம்எல்ஏ மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் எம்எல்ஏ மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் அகமது லக்னௌவில் தாக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

    தில்லி முஸ்தஃபாபாத் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் அகமது. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந் நிலையில், வெள்ளிக்கிழமை லக்னௌவில் உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு ஹசன் அகமது பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஷியா பிரிவு மதகுரு மௌலானா கால்பே ஜாவ்வதின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் தில்லி ஷீலம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மதின் அகமது தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஹசன் அகமதின் சகோதரர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது கால்பே ஜாவ்வதின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அப்போது, ஜாவ்வதிற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.

    இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முறையான முன் அனுமதியைப் பெற்றிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றுவிட்டனர்' என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கண்டனம்: லக்னௌவில் ஹசன் அகமது எம்எல்ஏ தாக்கப்பட்டது மிகவும் கண்டித்தக்கது. அரசியலில் ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    "ஹசன் அகமது மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

    இத் தாக்குதலால் தில்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜனநாயக அரசியலில் ஒரு ஆபத்தான முன்மாதிரியாக இந்த சம்பவம் அமைந்துள்ளது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai