Enable Javscript for better performance
குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்துக் கட்சி கூட்டம்

    By புது தில்லி  |   Published on : 20th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை காலத்தில் தில்லியில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று துணை நிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    தில்லியில் குடிநீர் இணைப்புப் பெற்றுள்ள நுகர்வோருக்கு குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பகுதிகளில் குடிநீர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, குடிசைப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டுகிறது.

    தில்லியில் குடிநீர் பற்றாக்குறை, மாசடைந்த குடிநீர் விநியோகம் ஆகியன தொடர்பாக சராசரியாக 45 புகார்கள் கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகிறது. தில்லியில் நாள்தோறும் 847 மில்லியன் கேலன் (1 கேலன் = 3.7 லிட்டர்) குடிநீர் விநியோகிக்கப்படுவதாக ஜல் போர்டு தெரிவிக்கிறது.

    ஆனால், சந்திரவல், வாஜிராபாத், ஹைதர்பூர், நாங்லோயி, பவானா, பாகீரதி, சோனியா விஹார் ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் குறைந்த அளவில் மட்டுமே நீர் சுத்திகரிப்பட இயலும். இந் நிலையங்கள் முழு வீச்சில் இயங்குவதில்லை. இதைத் தொடர்ந்து மொத்தம் 500 அல்லது 600 மில்லியன் கேலன் நீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கும் நிலை உள்ளது. அதிலும், 40 சதவீதம் கசிவு என்ற பெயரில் தண்ணீர் திருடப்படுகிறது.

    தில்லியில் 60 சதவீதம் பகுதிகளுக்கு மட்டுமே தில்லி ஜல் போர்டு குடிநீர் விநியோகம் செய்கிறது. எஞ்சியுள்ள 40 சதவீத பகுதிகள் டேங்கர் லாரிகள், தனியார் குடிநீர் விநியோக நிறுவனங்கள் ஆகிவற் றை நம்பியுள்ளன.

    கோடை காலத்தில் சாந்தினி செüக், சதர் பஜார், ஷாஜஹானாபாத் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், கோடைக்காலத்தின்போது, "சம்மர் ஆக்ஷன் பிளான்' என்ற திட்டத்தை தில்லி அரசு முன்வைத்தாலும், அத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

    இந் நிலையில், கோடை காலத்தில் தில்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் கருத்தில் கொண்டு அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை துணைநிலை ஆளுநர் கூட்ட வேண்டும். அக் கூட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அழைக்கப்பட வேண்டும். ஆம்ஆத்மி ஆட்சியில் இருந்தபோது தில்லியில் வீடுதோறும் ஒவ்வொரு நாளும் 680 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறித்து கேஜரிவாலிடம் விளக்கம் கேட்க வேண்டும். குறிப்பாக, "சம்மர் ஆக்ஷன் பிளானை' அமல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai