Enable Javscript for better performance
சாலையில் சென்ற காரில் தீ: போக்குவரத்து ஸ்தம்பித்தது- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் சென்ற காரில் தீ: போக்குவரத்து ஸ்தம்பித்தது

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி வருமான வரி அலுவலக (ஐ.டி.ஓ.) சிக்னல் அருகே சனிக்கிழமை மாலை திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தில்லியில் முக்கியச் சந்திப்புகளில் ஐ.டி.ஓ. சிக்னலும் ஒன்று. அங்கிருந்துதான் புது தில்லி, கஷ்மீரி கேட், இந்தியா கேட் பகுதிகளுக்குச் செல்லும் வழி உள்ளது. எனவே, எப்போதும் அப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவு காணப்படும்.

    இந் நிலையில், சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இந்தியா கேட் பகுதியில் இருந்து ஐ.டி.ஓ. சிக்னல் அருகே வந்த காரில் திடீரென கரும்புகை வரத் தொடங்கியது. இதனால், காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதையடுத்து, அங்கு நின்றிருந்த போக்குவரத்துக் காவலர் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

    இந்த விபத்து சிக்னலின் மையப் பகுதியில் நிகழ்ந்ததால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அப் பகுதியில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "தில்லி இந்திரபிரஸ்தாவை சேர்ந்த செüரப் (22) என்பவர் காரை ஓட்டி வந்தார். அவரது உறவினரும் காரின் உரிமையாளருமான விஜய் (32) என்பவரும் காரில் இருந்தார். காரில் பயன்படுத்தப்பட்டு வந்த சிஎன்ஜி கசிவால் தீப்பற்றி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்றுவருகிறது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai