Enable Javscript for better performance
தில்லி ஆட்டோ ஓட்டுநர்களின்பிரச்னைகளை தீர்க்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஆட்டோ ஓட்டுநர்களின்பிரச்னைகளை தீர்க்க வேண்டும்

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்த பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், போலீஸாரோ அல்லது அரசு நிர்வாகத்தினரோ ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்று உறுதியளிக்க வேண்டும். மேலும், அவசரக் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் உள்ள ஹெல்ப்லைன் ("100') வசதி இருப்பது போல் ஆட்டோ ஓட்டுநர்களிடம் லஞ்சம் கேட்டு யாரேனும் தொந்தரவு செய்தால் உடனடியாகத் துணைநிலை ஆளுநர் அல்லது முதல்வரின் செயலகத்துக்கு புகார் தெரிவிக்க ஏதுவாக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    தில்லியில் ஒரு ஆட்டோவின் விலை ரூ. 1.40 லட்சம் ஆகும். ஆனால், வெளிச்சந்தையில் ரூ. 3.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆட்டோ மீட்டர் விலை ரூ. 7,000 என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் ரூ. 18,000 வரை விற்கப்படுகின்றது. எனவே, ஆட்டோ ஓட்டுநர்களைப் பாதிக்கும் வகையில் இது போன்ற சுரண்டல்களை தடுக்கக் கோரி துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார் ஹர்ஷ் வர்தன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai