Enable Javscript for better performance
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹிணி நாளை பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹிணி நாளை பொறுப்பேற்பு

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஜி. ரோஹிணி (47) திங்கள்கிழமை (ஏப்ரல் 21) பொறுப்பேற்கிறார்.

    துணை நிலை ஆளுநர் மாளிகையில் அன்று காலை 9.55 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்று உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் சங்கீதா திங்ரா சனிக்கிழமை தெரிவித்தார்.நீதிபதி ரோஹிணி தனது பணிக் காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறாமல் இருந்தால், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 4 ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். தில்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள 40 நீதிபதிகளில் ஏற்கெனவே 9 பெண் நீதிபதிகள் உள்ளனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி ரோஹிணியையும் சேர்ந்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai