Enable Javscript for better performance
தேர்தல் முடியும் வரை முக்கிய பதவிகளுக்கு பணிநியமனம் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் முடியும் வரை முக்கிய பதவிகளுக்கு பணிநியமனம் கூடாது

    By புது தில்லி  |   Published on : 20th April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் முடிவடையும் வரை முக்கிய பதவிகளுக்கு பணிநியமனங்களை மத்திய அரசு செய்யக் கூடாது என்று உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக பொதுச் செயலர் ஜே.பி. நட்டா தலைமையிலான குழுவினர் தில்லியில், துணைத் தேர்தல் ஆணையர் சுதிர் திரிபாதியை சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அதில், "மத்திய அரசில் காலியாகும் முக்கிய பதவிகளுக்கு மக்களவைத் தேர்தல் முடியும் வரை பணிநியமனம் செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும்.

    கேந்திரீய வித்யாலயா பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை மத்திய அரசு நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். பிரதமரின் ஊடகப் பிரிவு ஆலோசகர் பங்கஜ் பச்சௌரி மத்திய அரசின் கடந்த 10 ஆண்டுகால பொருளாதாரச் சாதனைகளை விளக்கி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.

    அரசு அதிகாரியான அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது குறித்து விசாரணை நடத்தி பங்கஜ் பச்சௌரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai