Enable Javscript for better performance
போலீஸ்காரர்களிடம் திருட்டு: 2 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ்காரர்களிடம் திருட்டு: 2 இளைஞர்கள் கைது

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ஹரியாணா காவலர்கள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி நூதனமான முறையில் பண பர்ûஸ திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறியது: ஹரியாணா மாநில காவல் துறையில் காவலர்களாகப் பணியாற்றி வருபவர்கள் தர்மேந்திர சிங், ஜஸ்பீர் சிங். மேற்கு தில்லியில் காவல் துறை தலைமையகம் அருகே உள்ள ஹரியாணா பவனில் அவர்கள் இருவரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருவர் திடீரென்று அவர்கள் இருவரின் கண்களிலும் மிளகாய் பொடியைத் தூவினர். இதில் நிலைகுலைந்த காவலர்கள் சுதாரித்துப் பார்ப்பதற்குள், அவர்களது பர்ஸ்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் ஏப்ரல் 4-ஆம் தேதி நிகழ்ந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ரவிகுமார் (24), ஷஃபி முகம்மது (25) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் அப் பகுதியை போலீஸார் கண்காணித்தபோது அவர்கள் சிக்கினர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai