Enable Javscript for better performance
போலீஸ் மீது புகார் தெரிவிக்க புதிய ஹெல்ப்லைன் \\\"1064\\\'- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் மீது புகார் தெரிவிக்க புதிய ஹெல்ப்லைன் "1064'

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் காவலர்கள், காவல் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க மேலும் ஒரு "ஹெல்ப்லைன்' (1064) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்த ஹெல்ப்லைனை தில்லி காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

    இது குறித்து தொலைபேசித் துறை அதிகாரி கூறுகையில், "காவல் துறையினர் மீது ஏதாவது புகார் இருந்தால் அதை மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண் வேண்டும் என்று தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, தொலைபேசி எண் ஒரு மாதத்துக்கு முன் வழங்கப்பட்டது. இப்போது அந்த எண் செயல்பாட்டுக்கு வந்துள்ளது' என்றார்.

    இதே போல் ஏற்கெனவே ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் "1031' ஹெல்ப்லைன் செயல்பட்டு வருகிறது. இது தில்லி பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தில்லி காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அதற்கு தனியாக புதிய ஹெல்ப்லைன் வசதி பெறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai