Enable Javscript for better performance
\\\"மேயர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "மேயர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

    By 'புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரக்கூடிய தில்லி மூன்று மாநகராட்சிகளின் தேர்தல்களில் மேயர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட வேண்டும் என்று பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தில்லியின் முதல் குடிமகனாக மேயர் உள்ளார். இதனால், அப் பதவிக்குரிய நபரை இடஒதுக்கீடு அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் நான் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானவர் என்று கருதிவிடக் கூடாது. இப் பதவி நீதிசார் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற பதவிகள் இடஒதுக்கீடு அடிப்படைக்கு அப்பால் வைக்கப்பட வேண்டும்.

    தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டதால் பொதுமக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. உண்மையிலேயே மூன்று மாநகராட்சிகள் இருக்க வேண்டுமானால், அவற்றுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஓர் அமைப்பு இருக்க வேண்டும்.

    ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் தில்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அவசர கோலத்தில் மாநகராட்சியை மூன்றாகப் பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. மக்களுக்கு தரமான சேவைகளை அளிக்க பாஜக கவுன்சிலர்கள் மேற்கொண்ட முயற்சிகளை தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் சில உயர் அதிகாரிகள் கவிழ்த்துவிட்டனர்.

    மூன்று மாநகராட்சிகளில் தில்லி அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆணையர்களுக்கு அதிகமான அதிகாரம் உள்ளது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்களுக்கு அதுபோன்ற அதிகாரம் ஏதும் இல்லை. ஆகவே, மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    தில்லி மாநகராட்சி அரசியல் கருத்தின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, தில்லி அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் அதிகமான கட்டுப்பாட்டில் மாநகராட்சிகள் இயங்கும் நிலை உள்ளது என்று விஜய் கோயல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai