Enable Javscript for better performance
ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ- Dinamani

சுடச்சுட

    

    தில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் செüக் மெட்ரோ ரயில் நிலையத்தின் கூரை சனிக்கிழமை முற்பகலில் தீ பிடித்தது.

    இது தொடர்பாக தில்லி தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், "கனாட் பிளேஸ், சென்ட்ரல் பார்க் பகுதியில் பூமிக்கு அடியில் ராஜீவ் செüக் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் கூரைப் பகுதியில் தீப்பிடித்துள்ளது.

    இதையடுத்து, மெட்ரோ நிலையத்தில் உள்ள தீ விபத்தைத் தெரிவிக்கும் அபாய ஒலிக் கருவி ஒலித்தது. புகாரின் பேரில் கனாட் பிளேஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் பிற்பகல் 1.28 மணிக்கு சீரடைந்தது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai