Enable Javscript for better performance
குலாலர் சங்க மாணிக்க விழா- Dinamani

சுடச்சுட

    

     தில்லி தமிழ் குலாலர் சங்க 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா ஞாயிற்றுக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெற்றது.

    இதில் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர்-நீதிபதி எம். கற்பக விநாயகம் தலைமை விருந்தினராகவும் பாரதிய மஹிளா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உஷா அனந்தசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    அந்த வகையில், எஸ். கிருஷ்ணமூர்த்தி (தமிழ்க் கலை வளர்ச்சி), புலவர் விஸ்வநாதன் (தமிழ் இலக்கியம்), டாக்டர் சரோஜா வைத்தியநாதன் (பரதநாட்டியம்), தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன் (தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சி), வி. பொன்ராஜ் (அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்), சீதா நாகஜோதி (குச்சுபுடி நடனம்), கே.வி.கே. பெருமாள் (பேச்சாளர்), எம். சேது ராமலிங்கம் (தமிழ்க் கவிதை), இரா. கருணாநிதி (கட்டடக்கலை), எஸ். நந்தகுமார் (சட்ட ஆலோசகர்), கே. கணேசன் (இளம் தொழில்முனைவோர்), ஏ.ஆர். கண்ணப்பன் (சமுக நலச் சேவை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    தில்லி தமிழ் குலாலர் சங்கச் செயலாளர் என். முருகேசன் தனது வரவேற்புரையில் "வருங்காலத்தில் குலாலர் சங்கம் பல போட்டிகளை பள்ளி மாணவர்களுக்கு நடத்தும்' என்று அறிவித்தார். சங்கத் தலைவர் தலைவர் பொ. மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ் விழாவையொட்டி நடைபெற்ற கோலம், விளையாட்டு, மாறுவேடம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai