Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்

    By புது தில்லி,  |   Published on : 21st April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் சுஷீல் குமார் தொடங்கிவைத்தார். அப்போது, சாலையில் வாகனங்களை ஓட்டும்போதும் நடக்கும்போதும் உரிய சாலை விதிகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

    நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சைக்கிள்களில் செல்வோர் மட்டும் 8 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் விஜய் சிபர், தில்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள், சைக்கிள் ஆர்வலர்கள், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai