Enable Javscript for better performance
தொழிலதிபரை கொல்ல முயன்ற வழக்கு:இளைஞருக்கு கடுங்காவல் சிறை- Dinamani

சுடச்சுட

    

    தொழிலதிபரை கொல்ல முயன்ற வழக்கு:இளைஞருக்கு கடுங்காவல் சிறை

    By புது தில்லி  |   Published on : 21st April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலதிபரை சுட்டுக் கொல்ல முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு நான்கரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்தர் மோகன் சோப்ரா. செங்கல் சூளை அதிபரான இவரை சுட்டுக் கொல்ல முயன்றதாக கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஷர்வான் (33) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

    வழக்கு விசாரணையின்போது போலீஸ் தரப்பில் கூறியது: "தொழிலதிபரான இந்தர் மோகன் சோப்ரா செங்கல் சூளையிலிருந்து வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது ஷர்வான் வழிமறித்துள்ளார். காரை நிறுத்தியதும் அவரது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் காலில் இரு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது அப் பகுதியில் ஆள்கள் வருவதைக் கண்டு ஷர்வான் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் 2009, டிசம்பர் 28-ஆம் தேதி நிகழ்ந்தது. தலைமறைவான ஷர்வான் 2010, ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

    வேறு ஒரு வழக்கில் தேடும்போது அவர் பிடிபட்டார். தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் இயங்கும் பிரபல கொள்ளைக் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு உள்ளது. அவர் மீது கொலை, கொள்ளை, போலீஸ் படையை துப்பாக்கியால் சுட்டது உள்பட 24 வழக்குகள் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி உமெத் சிங் கிரேவல், குற்றம்சாட்டப்பட்ட ஷர்வானுக்கு நான்கரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஆயுதச் சட்டப்படி 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்த நீதிபதி, இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai