சுடச்சுட

  

  புது தில்லியிலுள்ள நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன நிறுத்த மையங்கள் விரைவில் நவீனமயமாக்கப்படும் என்று என்டிஎம்சி (புது தில்லி முனிசிபல் கவுன்சில்) திட்டமிட்டுவருகிறது. வாகன நிறுத்த மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

  இது குறித்து அதன் தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா ஞாயிற்றுக்கிழமை கூறியது: வாகன நெரிசல் மிக்க பகுதிகளில் செயல்படும் வாகன நிறுத்த மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக என்டிஎம்சிக்கு புகார் வந்தது. இதைத் தடுக்க கடந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டது.

  இதைத் தொடர்ந்து, கான் மார்க்கெட், சரோஜினி நகர், தில்லி ஹாட், சங்கர் மார்க்கெட் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள வாகன நிறுத்த மையங்கள் கம்யூட்டர் வசதி, ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளிட்டவற்றுடன் நவீனமயமாக்கப்படும். இத் திட்டத்தின் மூலம், வாகனங்களை நிறுத்துவற்கு "ஆன்லைன் புக்கிங்' வசதி என்டிஎம்சி இணையத்தளத்தில் உருவாக்கப்படும்.

  அவற்றின் வெளியே தானியங்கி திரைப்பலகையும் நிறுவப்படும். அதில் வாகன நிறுத்த மையங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறும்.

  இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும். இதற்காக என்டிஎம்சி கட்டுப்பாட்டில் உள்ள 103 வாகன நிறுத்த மையங்களில் 99-இல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai