Enable Javscript for better performance
மழலையர் காப்பகத்தில் தீ:2 குழந்தைகள் உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மழலையர் காப்பகத்தில் தீ:2 குழந்தைகள் உயிருடன் மீட்பு

    By புது தில்லி,  |   Published on : 21st April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ரோஹிணியில் உள்ள மழலையர் பகல்நேர காப்பகம் ஒன்றில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெண் உரிமையாளர் பலத்த காயமடைந்தார். காப்பகத்தில் இருந்த இரு குழந்தைகளை போலீஸார் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    இது குறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரோஹிணியில் மழலையர் பகல் நேர காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக் காப்பகத்தை ஸப்னா úஸட் நடத்திவருகிறார்.

    இங்கு சனிக்கிழமை பிற்பகலில் சுமார் 12.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து, ஸ்பனா úஸட் அங்கிருந்து தப்பி இரண்டாவது மாடிக்குச் சென்றார். காப்பகத்தில் அன்மோல் (6), முகேஷ் (7) ஆகிய இரு குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

    அந்த சமயத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற தில்லி காவல் துறை தலைமை காவலர் ரிதுராஜ், காவலர்கள் ஜோகேந்திரா, ஜிதேந்திரா ஆகியோருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பவம் நிகழ்ந்த வீட்டின் பக்கத்து வீட்டு மாடி வழியாகச் சென்ற காவலர் ஜிதேந்திரா, தீப்பற்றி எறிந்த கட்டடத்தின் ஜன்னலை தனது கையால் உடைத்தார். பிறகு உள்ளே குதித்து குழந்தைகள் இருவரையும் காப்பாற்றினார். இந்த சம்பவத்தில் குழந்தைகள் காயமின்றி தப்பினர். அதே வேளையில், காவலர் ஜிதேந்திராவுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இத் தீ விபத்தில் மழலையர் காப்பகத்தின் உரிமையாளர் ஸப்னா úஸட்டிற்கு உடலில் 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவுதான் தீ விபத்துக்குக் காரணம் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai