Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி - Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயில் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி

    By புது தில்லி,  |   Published on : 21st April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி குதுப்மினார் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயன்ற தலைமைக் காவலர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அதிகாரி கூறுகையில், "தில்லி காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றிவரும் தயானந்த் அவாஸ் (50), ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் குதுப்மினார் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையில் இருந்து தற்கொலை செய்ய முயற்சித்து, தரைத் தளத்தில் குதித்துள்ளார்.

    அதில் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வந்தார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசரப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai