Enable Javscript for better performance
\\\"லோக்பால் உறுப்பினர்கள் நியமன நடவடிக்கையை நிறுத்த வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "லோக்பால் உறுப்பினர்கள் நியமன நடவடிக்கையை நிறுத்த வேண்டும்'

    By புது தில்லி,  |   Published on : 21st April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமனத்துக்கான நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

    லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால், அது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாக அமையும் என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai