Enable Javscript for better performance
வாடகை தாய்மார்கள் நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    வாடகைத் தாயாக செயல்படும் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை வலியுறுத்தி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.

    இனப் பெருக்கத்துக்கு உதவும் மூன்றாம் தரப்பு இந்திய சமூகத்தினர் (இன்ஸ்டார்) என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் 200-க்கும் மேற்பட்ட வாடகைத் தாய்மார்கள் தங்கள் கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் பங்கேற்றனர். இது குறித்து இன்ஸ்டார் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சிவானி ஸச்தேவ் கெளர் கூறுகையில், "வாடகைத் தாயாக செயல்படும் பெண்கள், தங்கள் குடும்பத்தினரால் கைவிடப்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திப்பதை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது' என்றார்.

    இன்ஸ்டார் அமைப்பின் தலைவர் டாக்டர் ஹிமான்ஷு பாவிஷி கூறுகையில், "இந்த நடைப்பயணம் மூலம் வாடகைத் தாயாக செயல்படும் பெண்களின் கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai