Enable Javscript for better performance
ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடிவு?- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடிவு?

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெறாமலேயே நீட்டிக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து புதிதாக தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதத்தில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    அரசியல் சட்டப்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    இது தொடர்பான முந்தைய பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஒரு புதிய பிரகடனத்தின் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க அரசியல் சட்டத்தில் வழியிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக புதிய பிரகடனத்தின்மூலம் மீண்டும் அதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai