Enable Javscript for better performance
கத்திக் குத்து: இளைஞருக்கு சிறை- Dinamani

சுடச்சுட

    

    ஒருவரை கத்தியால் குத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

    தில்லியைச் சேர்ந்தவர் முகமது ஆதிக் (38). இவரும், இவருடைய சகோதரர்களான நசீருதீன் (39), மொய்னுதீன் (40) ஆகியோர் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த முகமது அக்ரம் என்பவரைத் தாக்கியுள்ளனர். 2006, அக்டோபர் 3-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    அப்போது அக்ரமின் அடிவயிற்றில் ஆதிக் கத்தியால் குத்தியுள்ளார். அதைத் தடுக்க வந்த அக்ரமின் தந்தை, சகோதரர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆதிக், அவரது சகோதரர்கள் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அதுல் குமார் கர்க் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில், குற்றம்சாட்டப்பட்ட முகமது ஆதிக்குக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    அவரது சகோதரர்களான நசிருதீன், மொயினுதீன் ஆகிய இருவரும் காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த அக்ரமின் சகோதரர் அஸ்லாம், தந்தை யாமின் ஆகியோருக்கு, நஷ்ட ஈடாக தலா ரூ. 50,000-ஐ நசீருதீன், மொய்னுதீன் ஆகிய இருவரும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai