Enable Javscript for better performance
காரில் கடத்திவரப்பட்ட 10,000 மது பாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டா, கெளதம் புத்த நகரில் காரில் கடத்தி வரப்பட்ட 10,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து மாவட்ட கலால் துறை அதிகாரி குல்தீப் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியது:

    தேர்தலையொட்டி தில்லி, தேசியத் தலைநகர் வலயம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாருடன் இணைந்து கலால் துறை அதிகாரிகள் அடங்கிய குழு மதுபான கடத்தல், விநியோகம், விற்பனை ஆகியவற்றை  தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

    இந் நிலையில், நொய்டாவில் ஜுனாயித்பூரில் உள்ள தன்கெüர் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சோதனையின்போது காரில் மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.  காரில் இருந்த 200 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படடன.

    இந்த சம்பவம் தொடர்பாக தன்கெளர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும் மதுபானக் கடத்தல் தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 வாகனங்கள், 4,300 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai