Enable Javscript for better performance
காஷ்மீருக்கு 370ஆவது பிரிவு அளித்த பலன்கள் என்ன?- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீருக்கு 370ஆவது பிரிவு அளித்த பலன்கள் என்ன?

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்தப் பிரிவால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் எவ்வாறு பலனடைந்தது என்பதைக் கூற வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

    அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் எந்த ஒரு பலனையும் அடையவில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த மாநிலம் பலனடைந்திருந்தாலோ, அதன் ஏழ்மையைக் குறைக்க அப்பிரிவு உதவி செய்திருந்தாலோ அதை நாங்கள் வரவேற்போம்.

    ஆனால், அது நடக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து விவாதத்தில் ஈடுபடத் தயார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

    ""பாஜக ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய பிரிவு 370ஐ நீக்குவது குறித்து அனைத்துத் தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்படும்'' என்று அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து பதிலளித்த ராஜ்நாத் சிங், ""பாகிஸ்தான் மற்றும் நமது இதர அண்டை நாடுகளுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் நட்புறவு கொள்வதற்கான எண்ணத்தை பாகிஸ்தானும் கொண்டிருக்க வேண்டும்.

    அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்த மன்மோகன் சிங் அரசு தவறிவிட்டது. பாகிஸ்தான் மற்றும் இதர அண்டை நாடுகளுடன் ஏற்கெனவே நாங்கள் நட்புக் கரம் நீட்டியுள்ளோம்'' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai