Enable Javscript for better performance
தருண் தேஜ்பால் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கோவா போலீஸýக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தேஜ்பாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, "தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும். அதற்காக, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்க உள்ளார்' என்று வாதாடினார்.  பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தேஜ்பால் கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai