Enable Javscript for better performance
திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்து ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நொய்டா பகுதியில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் இறந்தார். 40 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து தன்கெüர் கிராமத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்தது. அவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தங்களது ஊருக்கு தனி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தன்கெளர் பகுதியில் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.

    இதையடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். காயமடைந்த 40 பேர் தன்கெளர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai