Enable Javscript for better performance
தேர்தல் பணியில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை நியமிக்கக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பணியில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை நியமிக்கக் கூடாது

    By புது தில்லி  |   Published on : 22nd April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து மத அமைப்புகளுக்கு ஆதரவான அதிகாரிகளை மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் கே.சி.மித்தல் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ராம சேனை உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவான அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த அதிகாரிகளால் பாரபட்சமற்ற வகையிலும், நியாயமான முறையிலும் தேர்தலை நடத்த இயலாது. இப்படிப்பட்டவர்களிடம் தேர்தல் பணிகளை கண்காணித்தல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை ஒப்படைப்பது சரியாக இருக்காது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு வட்டார வளர்ச்சி அதிகாரி தனது வீட்டுக்கே எடுத்துச் சென்று அவற்றில் குளறுபடிகளைச் செய்தது குறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

    எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோன்ற குளறுபடிகள்  ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால் தேர்தல் பணிகளில் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவான அதிகாரிகளை நியமிக்கக் கூடாது.

    இதுகுறித்து அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai