Enable Javscript for better performance
பராமரிப்புப் பணிகள்:உயர் நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சியின் அனுமதியின்றி ஜாமா மசூதி அருகே நடைபெறும் பணிகளுக்குத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    தில்லி ஜாமா மசூதி அருகே உள்ள "ஹரே பரே ஷா தர்கா', "சூஃபி சர்மாத் ஷாகீது' ஆகியன அமைந்துள்ளன. அவற்றில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அனுமதி பெறாமல் நடைபெறும்   இது போன்ற கட்டடப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி மீனா பஜாரைச் சேர்ந்த முகமது அஃப்தாப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 4-ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமா மசூதி பகுதியில் அனுமதி பெறாமல் நடைபெறும் கட்டடப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக அப் பகுதிக்கு சென்று வடக்கு தில்லி மாநகராட்சி, இந்திய தொல்லியல் துறை ஆகியவை ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந் நிலையல், இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "ஜாமா மசூதி பகுதியில் நடைபெறும் அனுமதி பெறாத பராமரிப்புப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. அப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வடக்கு தில்லி மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும்' என்று  உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai