Enable Javscript for better performance
வங்கியில் பணம் செலுத்த சென்றவரிடம் நூதனத் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வங்கியில் பணம் செலுத்த சென்றவரிடம் நூதனத் திருட்டு

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள பொதுத் துறை வங்கியில் பணம் செலுத்தச் சென்றவரின் கவனத்தை திசை திருப்பி ரொக்கம் ரூ. 45,000 திருடப்பட்டது. நூதன முறையில் பணத்தை திருடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    வங்கியின் பணம் வாங்கும் கவுன்ட்டர் அருகே நடந்த சம்பவம் குறித்து போலீஸார் திங்கள்கிழமை கூறியது: தெற்கு தில்லி மஹிபால்புர் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் பணம் செலுத்துவதற்கு அமித் புவனேஷ்வர் பாடக் என்பவர் வியாழக்கிழமை காலை சென்றார். வங்கியில் தான் செலுத்த உள்ள ரூ. 1.58 லட்சத்தை குறிப்பிட்டு பணம் செலுத்துவதற்கான படிவத்தை நிரப்பினார்.

    அதன் பிறது பணம் செலுத்தும் கவுன்ட்டர் அருகே சென்ற அமித், பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அருகே நின்றிருந்த இளைஞர், ரூபாய் நோட்டுகளில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாகக் கூறியுள்ளார். உடனே கள்ள நோட்டுகள் ஏதேனும் கலந்துள்ளனவா என்பதைக் கண்டறிவதில் அந்த இளைஞருடன் அமித் கூடுதல் கவனம் செலுத்தினார்.

    பின்னர் அவர் பணத்தை கவுன்ட்டரில் செலுத்தச் சென்றபோது, படிவத்தில் எழுதி இருந்த தொகைக்கும் செலுத்தவிருந்த தொகைக்கும் வித்தியாசம் உள்ளதை வங்கி அதிகாரி சுட்டிக்காட்டினார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அமித் உணர்ந்தார்.

    கள்ள நோட்டு இருப்பதாக கூறிய இளைஞர், தொகையில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டு வெளியேறியதை அமித் அப்போதுதான் உணர்ந்தார்.

     இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். பணத்தை அபகரித்த இளைஞரின் முகம் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சரியாக பதிவாகாததால் மேற்கொண்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai