Enable Javscript for better performance
அரசு விளம்பரங்களை நெறிமுறைப்படுத்த நால்வர் குழு: உச்ச நீதிமன்றம் அமைத்தது- Dinamani

சுடச்சுட

    

    அரசு விளம்பரங்களை நெறிமுறைப்படுத்த நால்வர் குழு: உச்ச நீதிமன்றம் அமைத்தது

    By dn  |   Published on : 23rd April 2014 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு விளம்பரங்கள் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை வகுக்க 4 நபர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

    இக்குழுவில் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமி இயக்குநர் என்.ஆர்.மாதவ மேனன், முன்னாள் மக்களவை செயலர் டி.கே. விஸ்வநாதன், மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் மற்றும் தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை செயலர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இக்குழு, 3 வாரங்களுக்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு கருவூலத்தைப் பயன்படுத்தி, அரசு விளம்பரம் செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில்

    பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai