Enable Javscript for better performance
ஓடும் ரயிலில் பயணிகளிடம் பணம், நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    காஜியாபாத் - மொரதாபாத் இடையே ஓடும் ரயில்களில் பயணிகளை துப்பாக்கிமுனையில் மிரட்டி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இக் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து ரயில்வே போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் தியாகி கூறியது: இந்த இரண்டு சம்பவங்களும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி முதல் 3.30 மணிக்குள் நிகழ்ந்துள்ளது. புது தில்லி-லக்னெü, லக்னெள-புது தில்லி ஆகிய இரண்டு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் காஜியாபாத், மொரதாபாத் மாவட்டத்தைக் கடக்கும் போது கொள்ளையர்கள் பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணத்தைப் பறித்துள்ளனர்.

    முதல் சம்பவம் குறித்து அதிகாலை 1.15 மணிக்கு புகார் பெறப்பட்டது. புதுதில்லியிலிருந்து லக்னௌ செல்லும் அந்த ரயில் மொரதாபாத் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் துப்பாக்கிகளுடன் ரயிலில் நுழைந்தனர். ரயில் புறப்பட்டு வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அக் கும்பலினர் திடீரென பயணிகளான ராகுல், மல்ஹோத்ரா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை துப்பாக்கிமுனையில் மிரட்டி பணம், நகைகளைப் பறித்தனர். லக்னெüவுக்கு செல்லும் அக் குடும்பத்தினரிடம் இருந்து ரொக்கம் ரூ.50,000, தங்கச் சங்கிலிகள், விலைமதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்தனர். இதைத் தொடர்ந்து, அக் கும்பலினர் ரயிலின் அவசரகால அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் நின்றதும் அனைவரும் தப்பிச் சென்றனர்.

    இதே கும்பல்தான் லக்னெüவிலிருந்து புதுதில்லி வந்து கொண்டிருந்த ரயிலில் கொள்ளையடித்துள்ளது. இச் சம்பவம் அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொரதாபாத் ரயில் நிலையத்தில் ஏறிய கும்பலினர், பயணிகளைத் துப்பாக்கி முனையில் மிரட்டி 7 பேரிடம் மொபைல் போன்கள், பணம், விலைமதிப்புள்ள பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்தனர். அப்போது எதிர்ப்புத் தெரிவித்த பயணிகள் சிலரைத் தாக்கினர். பின்னர் அவசரகால அபாய சங்கிலியை இழுத்து ரயில் நின்றதும் தப்பிச் சென்றனர்.

    இச் சம்பவம் தொடர்பாக மொரதாபாத் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ள விடியோ காட்சிகளைக் அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது. அதை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai