Enable Javscript for better performance
டிஎம்ஆர்சி விரிவாக்கத் திட்டங்களின் கீழ் தில்லிக்குள் கூடுதல் ரயில் சேவைகள்- Dinamani

சுடச்சுட

    

    டிஎம்ஆர்சி விரிவாக்கத் திட்டங்களின் கீழ் தில்லிக்குள் கூடுதல் ரயில் சேவைகள்

    Published on : 23rd April 2014 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) செயல்படுத்தவுள்ள புதிய விரிவாக்கத் திட்டங்களின் கீழ், தேசிய தலைநகர வலயப் பகுதிகளை இணைக்கும் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டு, தலைநகருக்குள் மட்டும் கூடுதல் ரயில்கள் இயக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக பிரதேச அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுமதி அளித்துள்ளார்.

    இதையடுத்து, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளான காஜியாபாத், பல்லப்கர், நொய்டா விரிவாக்கம் 62-ஆவது செக்டார் ஆகிய பகுதிகளில் முறையே நிலுவையில் உள்ள முதலாவது விரிவாக்க பாதை (தில்ஷாத் கார்டன்- ரிதாலா), ஆறாவது விரிவாக்க பாதை (சென்ட்ரல் செக்ரடேரியேட்- பதர்பூர் / ஒய்.எம்.சி.ஏ. சௌக்), மூன்றாவது விரிவாக்க பாதை (துவாரகா-நொய்டா/வைஷாலி) ஆகியவற்றில் திட்ட அமலாக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப் பாதைகளில் தில்லிக்குள் மட்டும் கூடுதல் சேவைகளை இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையை தில்லி பிரதேச அரசு, உத்தர பிரதேசம், ஹரியாணா மாநில அரசுகள் ஆகியவற்றிடம் ஏற்கெனவே டிஎம்ஆர்சி அளித்திருந்தது. விதிகளின்படி, தில்லியை  தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஎம்ஆர்சி நிர்வாகத்துக்கு தில்லி அரசு விரிவாக்கத் திட்டங்களுக்கான ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும். அதற்கான உத்தரவுக்குத்தான் தற்போது துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுமதி அளித்துள்ளதார்.   எனினும், இந்த விரிவாக்கப் பாதைகள் செயல்வடிவம் பெற குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும் என்று டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

     துணை நிலை நிலை ஆளுநரின் ஒப்புதல் நிபந்தனையின் பேரில் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தற்போது அமலில் உள்ள மெட்ரோ பாதைகளில் இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது.  விரிவாக்கத் திட்டத்தின்படி தேசியத் தலைநகர்  வலய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதில் மூன்று ரயில்களுக்கு ஒரு ரயில் என்ற நிலையில், தில்லிக்குள் மட்டும் இயங்கும் வகையில் ரயில்களின் சேவை அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் தில்லிக்குள் உள்ள பயணிகளுக்கு உடனுக்குடன் ரயில் சேவை கிடைக்கவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் வாய்ப்பு ஏற்படும் என டிஎம்ஆர்சி நம்புகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai