Enable Javscript for better performance
டிடிசி பயணத்துக்கு மெட்ரோ ஸ்மார்ட் கார்டு: துணை நிலை ஆளுநர் பரிசீலனை- Dinamani

சுடச்சுட

    

    டிடிசி பயணத்துக்கு மெட்ரோ ஸ்மார்ட் கார்டு: துணை நிலை ஆளுநர் பரிசீலனை

    Published on : 23rd April 2014 11:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லிமெட்ரோ ரயில் பயணங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளை டிடிசி பஸ் பயணத்துக்கும் பயன்படுத்துவது குறித்து துணைநிலை ஆளுநர் நஜீம் ஜங் பரிசீலித்து வருவதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

     இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நீண்ட காலமாக இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது அந்த அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய முறை ஒன்றையும் போக்குவரத்து துறை பரிசீலித்து வருகிறது. அதற்கான பரிட்சார்த்த முயற்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இத் திட்டம் குறித்த அறிக்கை துணை நிலை ஆளுநர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர் பரிசீலித்து ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

     இத் திட்டம் தொடங்கப்பட்டால், மெட்ரோ ரயிலில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பஸ் பயணத்துக்கும் ரீசார்ஜ் செய்யும் நடைமுறையும் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai