Enable Javscript for better performance
தில்லி ஜாமா மசூதி அருகே முஜாஹிதீன்கள் தாக்கியது ஏன்?: போலீஸ் புதிய தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஜாமா மசூதி அருகே முஜாஹிதீன்கள் தாக்கியது ஏன்?: போலீஸ் புதிய தகவல்

    Published on : 23rd April 2014 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜாமா மசூதி அருகே 2010-ஆம் ஆண்டில் இந்திய முஜாஹிதீன்கள் தாக்குதல் நடத்தியது ஏன் என்பதை தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    2008-ஆம் ஆண்டில் கரோல் பாக், கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல, 2010, செப்டம்பரில் ஜாமா மசூதி அருகே வெளிநாட்டு பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அப் பகுதியில் ஒரு காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இச் சம்பவங்களில் தொடர்புடையதாக யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகிய இருவர் அண்மையில் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இரு குற்றப்பத்திரிகைகளை தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தனர்.

    மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அக் குற்றப்பத்திரிகைகளின் விவரம் வழக்கு விசாரணை தொடர்பான வாதம் நடைபெறும் போதுதான் வெளியே தெரிய வருகிறது. இந் நிலையில், ஜாமா மசூதி பகுதியை இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்தது ஏன் என்ற விவரம் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

    "தில்லியில் 2010, செப்டம்பரில் ஜாமா மசூதி அருகே வெளிநாட்டினரைக் குறிவைத்து இரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பலத்தகாயம் அடைந்தனர். மேலும், மசூதி அருகே காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. அச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந் நிலையில், 2010, பிப்ரவரி 13-ஆம் தேதி புணே ஜெர்மன் பேக்கரியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய கும்பல்தான் ஜாமா மசூதி அருகே தாக்குதல் நடத்தியதாக போலீஸார் சந்தேகித்தனர்.

    இந்திய முஜாஹிதீன் தலைவர் யாசின் பட்கல் உத்தரவின்பேரில் புணேவில் தாக்குதல்  நடத்திய கத்தீல் சித்திக், முகம்மது அத்தில் ஆகியோர் தில்லி பஹர்கஞ்ச் பகுதியில் 2010, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அவர்களுக்குத் தேவையான வெடிமருந்துகள், துப்பாக்கி, தங்குமிட வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்க யாசின் பட்கல் உதவினார். ஆனால், தாக்குதலை நடத்தச் செல்லும் வழியில் கத்தீல் வைத்திருந்த துப்பாக்கிதவறுதலாக இயக்கப்பட்டதில், அதில் இருந்த தோட்டா அவரது இடுப்புப் பகுதியில் துளைத்தது. இதையடுத்து, பஹர்கஞ்ச் தாக்குதல் திட்டத்தை பயங்கரவாதிகள் கைவிட்டனர்.

    அதைத் தொடர்ந்து, ஒரு மாதத்தில் குணம் அடைந்த அத்தீல், கத்தீலுடன் சேர்ந்து ஜாமா மசூதி பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும். வெளிநாட்டுப் பெண்கள் குட்டையாக ஆடை அணிந்து மசூதிக்குச் செல்வது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது. ஆகவே, மசூதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்த வேண்டும்' என்று யாசின் பட்கல் கட்டளையிட்டார்.  அண்மையில் போலீஸிடம் பிடிபட்ட யாசின் பட்கல், அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது இத் தகவல்கள் தெரிய வந்தன.

     மேலும், மசூதியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம் எனக் கருதியே வளாகத்துக்கு வெளியே தாக்குதல் நடத்தலாம் என்றும், அதற்கு மசூதியின் மூன்றாவது நுழைவு வாயில் பகுதியே சரியான இடம் என்றும் திட்டமிட்டு தாக்குதல் சதியை இருவரும் நிறைவேற்றியுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    2010, செப்டம்பரில் ஜாமா மசூதி அருகே தாக்குதல் நடத்திய பிறகு தலைமறைவான கத்தீல் சித்திக், ஜெர்மன் பேக்கரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக மகராஷ்டிர மாநில போலீஸாரால் 2011, டிசம்பரில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கு மீது 2010-இல் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தவர் என அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

     இந் நிலையில், புணே ஏர்வாடா சிறையில் கத்தீல் மர்மமான முறையில் 2012, ஜூன் மாதம் உயிரிழந்தார். அவரது கூட்டாளி அத்தில், ராஜஸ்தான்-தில்லி போலீஸ் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் கடந்த மார்ச் மாதம் ஜோத்பூரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai