Enable Javscript for better performance
தில்லி மெட்ரோ ரயில்களில் பெண் ஜேப்படி திருடர்கள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மெட்ரோ ரயில்களில் பெண் ஜேப்படி திருடர்கள் அதிகரிப்பு

    By dn  |   Published on : 23rd April 2014 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் ஜேப்படி திருட்டில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. நிகழாண்டின் கடந்த மூன்று மாதங்களில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸார் கைது செய்துள்ள ஜேப்படி திருடர்களின் எண்ணிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.

    தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் தில்லி, குர்கான், ஃபரீதாபாத், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள 134 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியை சிஐஎஸ்எஃப் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரயில் நிலையங்களின் நடைமேடைகள், ரயில் பெட்டிகள், வளாகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்துப் பயணிகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பிறகே ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

    ரயில் பெட்டிகளிலும், நடைமேடைகளிலும் கூட்ட நெரிசலின் போது ஜேப்படி திருட்டுகள் நிகழ்வதைத் தடுப்பது போலீஸாருக்கு சவாலாக இருந்து வருகிறது.

    நிகழாண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலங்களில் மட்டும் ஜேப்படி திருட்டில் ஈடுபட்டதாக 126 பேரை சிஐஎஸ்எஃப் போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 118 பேர் (94 சதவீதம்) பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது.

     கடந்த ஆண்டும் தில்லி மெட்ரோ ரயில்களில் பல்வேறு இடங்களில் 466 ஜேப்படி திருடர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 421 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேப்படி திருட்டு ஒருங்கிணைப்பில் 90.43 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதாகவும், தேசிய தலைநகர் வலயப் பகுதி பொதுப் போக்குவரத்து அமைப்பை தங்களது வாழ்வாதாரத்திற்கான முக்கியத் தளமாக அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒரு வர் கூறுகையில், "ரயில்களில் ஜேப்படி திருட்டில் ஈடுபடும் பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். ரயில் பெட்டிகளில் இவர்கள் கையில் குழந்தையுடன் பயணிக்கின்றனர்.

    இதனால், சக பயணிகள் சந்தேகிக்க முடியாமல் போய்விடுகிறது. இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பயணிகளின் உடைமைகளைத் திருடி விடுகின்றனர். இதனால், பெண் ஜேப்படி திருடர்களைப் பிடிப்பதற்காகவே சாதாரண உடைகளில் சிஐஎஸ்எஃப் பெண் போலீஸார் ரயில் நிலையங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

    இந்த ஆண்டு ஜனவரியிய்க் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 586 பேர் கீழே இறக்கிவிடப்பட்டனர். மேலும், மெட்ரோ ரயில் பாதையில் நடந்து சென்றதாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ நுழைவுப் பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சிஐஎஸ்எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai