Enable Javscript for better performance
தில்லி மெட்ரோ ரயில் பயணம்: மாற்றுத்திறனாளிகளுக்கு பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மெட்ரோ ரயில் பயணம்: மாற்றுத்திறனாளிகளுக்கு பயிலரங்கம்

    By dn  |   Published on : 23rd April 2014 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்குரிய சிறப்பு வசதிகள் குறித்த தகவல்களை விளக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தில்லி மெட்ரோ அருங்காட்சியகம் சார்பில் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

    தில்லி மெட்ரோ அருங்காட்சியகம், தன்னார்வத் தொண்டு நிறுவனமான பிரேர்னா நிகேதன் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இப் பயிலரங்க நிகழ்ச்சியில், 9 முதல் 40 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போதும், ரயில் நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆவணப்படம் ஒளிப்பரப்பப்பட்டன. இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள், லிப்ட் வசதி, கண் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் தரையில் பதிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற ஓடுகள் போன்றவை எடுத்துரைக்கப்பட்டன.

    அதன்பின் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் (நிதி) கே.கே.ஷாபர்வால் பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai