Enable Javscript for better performance
தெற்கு தில்லியில் தீ விபத்து 10 வீடுகள், 2 கடைகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி, கோவிந்தபுரி பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள், 2 கடைகள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன.

    முதலில் அப் பகுதியில் உள்ள கடையில் தீ பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் 10 வீடுகள், 2 கடைகள், மோட்டார்சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.

    இது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி கூறுகையில், "தீ விபத்து குறித்த தகவல் இரவு 9.30 மணியளவில் கிடைத்தது.

    கோவிந்தபுரி, லால் செüக் பகுதியில் உள்ள ஒரு கடையில் 5 கேஸ் சிலிண்டர்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகள், வீடுகளுக்கும் பரவியது.

    உடனடியாக 8 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்தனர். அவர்கள் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai