Enable Javscript for better performance
நடத்தையில் சந்தேகம் மனைவி கொலை: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டாவில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்றதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

    கிரேட்டர் நொய்டா, குலெஸரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவரது மனைவி அனுராதா (26). மனைவியின் நடத்தையில் ஆனந்த் குமார் சந்தேகமடைந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை   அவர் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.

    புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆனந்த் குமார் கைது செய்யப்பட்டார். மனைவியை கொலை செய்ததை விசாரணையின்போது அவர் ஒப்புக்கொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai