Enable Javscript for better performance
பஞ்சாபி இசை விழா: நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் "பைசாகி' திருவிழாவையொட்டி பஞ்சாபி இசை விழா தில்லி இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தொடங்குகிறது.

    "பைசாகி' பண்டிகையையொட்டி தில்லி கலை, பண்பாடு மற்றும் மொழிகள் துறை மற்றும் பஞ்சாபி அகாதெமி சார்பில் "பஞ்சாபி மேளா' என்ற  விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந் நிகழ்ச்சிகள் மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

    முதல் நாள் இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் குர்மீத் பாவா, லச்சி, குளோரி பாவா, ஜாஸ்பிர் ஜாஸி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இரண்டாவது நாளில் பரம்ஜித் சித்து, ஷாஃப்ஹத் அமனத் அலி, மூன்றாவது நாளில் மம்தா ஜோஷி, லக்விந்தர் வாதாலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இது தவிர பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறந்த "புல்காரி' (துணி வகை), செருப்பு, வளையல்கள், மரச்சாமான்கள், "இன்லே' பொருள்கள் உள்ளிட்டவை இந் நிகழ்ச்சியில் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பஞ்சாபிகளின் பாராம்பரிய நடனங்களான "பாங்க்ரா', "கத்கா', "பாஸி', "தாதி', "நகுல்', "கித்தா' ஆகியன இந்த மேளாவில் இடம் பெறுகின்றன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai