Enable Javscript for better performance
பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்- Dinamani

சுடச்சுட

    

    "நாட்டில் வளர்ச்சி ஏற்படுத்துவேன் என்று பிரசாரம் செய்து வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னால் தீவிர மதவாத பிரசாரம் அமைந்துள்ளது. இது அக்கட்சியின் பிற தலைவர்களின் வெறுப்பூட்டும் பேச்சுகளின் மூலம் அம்பலமாகி வருகிறது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

    அக்கட்சியின் இதழில் சீதாராம் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    நாட்டில் வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று மோடி பிரசாரம் செய்து வருகிறார். அதே நேரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, கிரிராஜ் சிங், வி.எச்.பி. அமைப்பின் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா ஆகியோர் வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசி வருகிறார்கள்.

    அதை பாஜகவும், மோடியும் அங்கீகரிக்கிறார்கள். இது "ஹிந்துத்வா' கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விடுத்துவரும் மறைமுக மிரட்டலாகும்.

    உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் இது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வளர்ச்சி குறித்து பேசி வரும் மோடியின் பேச்சுக்கு பின்னால், மதவாதம் அமைந்திருப்பதை இது காட்டுகிறது. இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகிறது' என்று யெச்சூரி தெரிவித்துள்ளார்.

    ஒமர் அப்துல்லா கண்டனம்: முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக பாஜக, வி.எச்.பி. அமைப்பின் தலைவர்கள் பேசி வருவதற்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கன்டேர்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "முஸ்லிம் சமுதாயத்தினரை அச்சுறுத்தும் விதத்தில் பேசி,  மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி தேர்தலை சந்திக்க பாஜக, சங்பரிவார் அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. இது திட்டமிட்ட சதியாகும்' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai