Enable Javscript for better performance
போக்குவரத்து தலைமைக் காவலரை தாக்கியதாக இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துத் தலைமைக் காவலரைத் தாக்கியதாக இளைஞர் ரம்பீர் கைது செய்யப்பட்டார்.

    தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் போக்குவரத்துத் தலைமைக் காவலராகப்  பணியாற்றி வருபவர் சஞ்சய். கவிநகரில் ஹபூர் சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றும்படி அதன் உரிமையாளரான ரம்பீரை சஞ்சய் கேட்டுக் கொண்டார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரம்பீர், சஞ்சயை தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றார்.

    அப்போது அப் பகுதியில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து போலீஸýக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சஞ்சய் அளித்த புகாரின் பேரில் கவிநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரம்பீர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai