Enable Javscript for better performance
ரயில் நிலையத்தில் வழிப்பறி: இளைஞர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பயணியிடம் மொபைல் போன் உள்ளிட்டவற்றைத் திருடியதாக இளைஞர்கள் இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து தில்லி ரயில்வே போலீஸ் துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

    தில்லி நரேலா கெüதம் காலனியைச் சேர்ந்தவர் சர்வன் குமார். இவர் ஏப்ரல் 17-ஆம் தேதி பஞ்சாப் மெயில் ரயிலில் பயணம் செய்தார். சதர் பஜார் ரயில் நிலையத்தை அடைந்த போது, நான்கு இளைஞர்கள் ரயிலில் ஏறினர். அப்போது, சர்வன் குமார் வைத்திருந்த செல்போன், கடிகாரங்கள், ரொக்கம் ரூ.4,000 உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு ஓடினர்.

    இதையடுத்து, துரத்திச் சென்ற சர்வன் குமார், அவர்களில் ஒருவரை மட்டும் பிடித்தார். ஆனால், அப்போது கீழே இருந்த கல்லால் சர்வனின் தலையில் அடித்துவிட்டு அவரும் தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சர்வன் குமார் பழைய தில்லி ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து, தில்லி ஜுகி பீலி கோதியைச் சேர்ந்த சஞ்சித் குப்தா (எ) சஞ்சய் (24), கர்ணன் (எ) சாஞ்சி (22) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சர்வன் குமாரிடம் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில்,  அஜய், விக்ரம் ஆகியோரைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai