Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு தில்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த சீமந்த்ராஜ் (37) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

    வடகிழக்கு தில்லி, சீமாபுரியைச் சேர்ந்தவரான சீமந்த் ராஜுக்கு திருமணமாகவில்லை. சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர், மத்திய தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் ஒரு கட்டடத்தையும் கட்டி வந்தார். கடந்த பல நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இந் நிலையில். சில நாள்களுக்கு முன்புதான் வீட்டுக்குத் திரும்பினார்.

    இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இரவு உணவு சாப்பிட்டவர் பின்னர் தூங்குவதற்காக தனது அறைக்குச் சென்றார். அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.  திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அவருடைய சகோதரி எழுந்து பார்த்தபோது சீமந்த் ராஜின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

    அதை அணைப்பதற்காக அறைக்குச் சென்றபோது சீமந்த் ராஜ் மின்விசிறியில் ரப்பர் டியூப் உதவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதைப் பார்த்தார். இதையடுத்து, அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்து போலீஸýக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து சடலத்தை கைப்பற்றி குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவரது அறையில் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கப்படவில்லை. அவரது தொழில் நன்றாகத்தான் நடந்து வந்துள்ளது. ஆனால், திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் ஏன் இந்த விபரீத முடிவுக்கு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai