Enable Javscript for better performance
வலிமை, வளமான இந்தியாவை உருவாக்க தகுதியானவர் மோடி: எழுத்தாளர் ஜோ டி குருஸ்- Dinamani

சுடச்சுட

    

    வலிமை, வளமான இந்தியாவை உருவாக்க தகுதியானவர் மோடி: எழுத்தாளர் ஜோ டி குருஸ்

    By dn  |   Published on : 23rd April 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கத் தகுதியானவர் நரேந்திர மோடி என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ஜோ டி குருஸ், எஸ்.எல்.பைரப்பா (கர்நாடகம்), மிருதுளா சின்ஹா (பிகார்),நரேந்திர கோலி (ஜார்க்கண்ட்), இளம் எழுத்தாளர் துஹின் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், பிரசார யுக்திகள் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜோ டி குருஸ் கூறியதாவது: சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அவற்றைத் தடுக்க வலிமையான தலைமை நமக்குத் தேவை. அதற்கு நரேந்திர மோடிதான் தகுதியானவர். இந்தியாவை வளம் மிக்க நாடாக மாற்றவும் அவரால் மட்டுமே முடியும். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அம் மாநில வளர்ச்சியை நான் கண்கூடாகப் பார்த்தேன்.

    மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை குஜராத் முதல்வராக பதவி வகிக்கும்போது நன்கு உணர்ந்தவர் மோடி. எனவே, ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மோடி நிச்சயம் உதவுவார்.

    இந்தியாவில் படித்து முடித்து பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதால் நம் நாடு தொழில் வர்த்தகத்தில் பின்தங்கியுள்ளது. இந் நிலையை மாற்றி புதிய வேலைவாய்ப்புகளை மோடி உருவாக்குவார். இந்தியாவின் நம்பிக்கை இளைஞர்கள் கைகளில் உள்ளதைப்போல், இளைஞர்களின் நம்பிக்கை நரேந்திர மோடி மீது உள்ளது என்றார் ஜோ டி குரூஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai