Enable Javscript for better performance
இந்திய கடற்படை துணை தலைமை தளபதி சுனில் லம்பா?- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கடற்படை துணை தலைமை தளபதி சுனில் லம்பா?

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடற்படை துணைத் தளபதியாக உள்ள சுனில் லம்பா, துணை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து கடற்படை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

    பதவி மூப்பு அடிப்படையில் கடந்த வாரம் கடற்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற ராபின் தோவனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டில் தலைமைத் தளபதியாக சுனில் லம்பா பொறுப்பேற்க உள்ளார்.

    ஆனால் தற்போது கடற்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பால், கிழக்கு பிராந்தியத்தின் தலைமைத் துணைத்தளபதியாக உள்ள அனில் சோப்ரா, மும்பை சார்ந்த மேற்கு பிராந்தியத்துக்கும், கடற்படை துணைத் தளபதியாக உள்ள பிரதீப் சாட்டர்ஜி, அந்தமான் நிக்கோபார் சார்ந்த முப்படைகளுக்கு துணைத் தளபதியாகவும் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

    எனவே துணைத் தளபதியாகவும், தேசிய பாதுகாப்புப்படை கல்லூரியின் தளபதியாகவும் உள்ள சுனில் லம்பா, துணை தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், பல்வேறு விபத்துக்களை சந்தித்ததைத் தொடர்ந்து அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று தலைமைத் தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி பிப்ரவரி 26ஆம் தேதி பதவி விலகினார்.

    பதவி மூப்பு அடிப்படையில் தலைமைப் தளபதி வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மேற்கு பிராந்தியத்தின் துணை தளபதி ஷேகர் சின்கா பதவி விலகினார். இதைத்தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai