சுடச்சுட

    

    சிக்னல் விளக்குகள் பழுது: துவாரகாவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்!

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி துவாரகா பகுதியில் சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தில்லி துவாரகா செக்டர் 14, 16 பகுதி சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் கடந்த இரு வாரங்களாக சரிவர எரியாமல் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விளக்குகளில் பச்சையும் சிவப்பும் ஒரே நேரத்தில் ஒளிர்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இது குறித்து அப் பகுதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தும் சிக்னல் விளக்குகளில் உள்ள பழுதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    செக்டர் 16-இல் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் சிஆர்பிஎஃப் பஸ்ஸýம் சரக்கு லாரியும் மோதிக் கொண்டதில் மூன்று பெண் காவலர்கள் உயிரிழந்தனர். 18 காவலர்கள் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் சிக்கி உத்தம் நகரைச் சேர்ந்த புல்கித் கர்க் காயமடைந்தார். சிக்னல் விளக்குகளை விரைவாக சரிசெய்ய போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai