Enable Javscript for better performance
பாகிஸ்தான் நோயாளிகள் 500 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் நோயாளிகள் 500 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 500 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தில்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா அப்போலோ மருத்துவமனை சாதனை நிகழ்த்தியுள்ளதாக அதன் குழும மருத்துவ இயக்குநர் அனுபம் சிபல் தெரிவித்தார்.

    ஒரே வெளிநாட்டைச் சேர்ந்த 500 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதில் 90 சதவீதத்திற்கு மேல் வெற்றிகண்டதில் இந்தியாவிலேயே முதல் மருத்துவமனையாக அப்போலோ உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 1998-ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் அப்பல்லோ மருத்துவமனை முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அதன்பிறகு "அப்போலோ மாற்று அறுவைச் சிகிச்சை திட்ட'த்தில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் 1,700 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த 500 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் அந்நாட்டு கலாசாரம் குறித்தும் இரு நாட்டு சமூகத்தினர் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்தும் எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

    கடந்த ஆண்டு "அப்போலோ டிரான்ஸ்பிளான்ட் புரோகிராம்' மூலம் 23 நாடுகளைச் சேர்ந்த 1,458 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இவற்றில் 390 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும், 1,066 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் அடங்கும் என்றார் அவர்.

    கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவின் தலைவர் பேராசிரியர் சுபாஷ் குப்தா கூறுகையில், "500 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முடித்திருக்கும் இத் தருணம் மிகவும் மகிழ்ச்சியானது. தொலைதூரத்திலிருந்து வந்துள்ள நோயாளிகளின் தன்னம்பிக்கையாலும் உறுதியாலும்தான் இந்த சாதனையை நிகழ்த்தியதாக உணர்கிறோம்.

    மேலும், பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த ஆண் குழந்தை நலைன் ஆசிஸýக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இது 500-ஆவது அறுவை சிகிச்சையாகும்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி பிறந்த இக் குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மஞ்சள்காமாலை பாதிப்பு இருந்தது. மேலும், சிகிச்சைக்கு வந்தபோது சிறுநீர்ப் பாதையில் தொற்றுப் பிரச்னையும் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆண்டு மார்ச் மாத்தில் ஆசிஸின் கல்லீரல் பரிசோதிக்கப்பட்டது. அதன் செயல்பாடு இயல்பாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai