Enable Javscript for better performance
புராதன கட்டடக் கல்வி பயிற்சி: தொல்லியல் துறை உதவ கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புராதன கட்டடக் கல்வி பயிற்சி: தொல்லியல் துறை உதவ கோரிக்கை

    By புது தில்லி  |   Published on : 25th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுக்கு புராதன கட்டடக் கல்வி தொடர்பாக பயிற்சி அளிப்பதற்கு தொல்லியல் துறையின் உதவி நாடப்பட்டுள்ளது என்று கட்டடக் கல்விக்கான உயர்கல்வி நிறுவனம் (ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்சர்-எஸ்பிஏ) தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந் நிறுவனத்தின் இயக்குநர் சேத்தன் வைத்யா வியாழக்கிழமை கூறியது: நாட்டில் உள்ள வரலாற்று புராதன கட்டடங்களில் பொதிந்துள்ள ஏராளமான கூறுகளை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

    குறிப்பாக அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றாவறு கட்டடப்பட்டுள்ள கட்டடங்கள், கலசாரங்களை வெளிப்படுத்தும் கட்டடங்கள் ஆகியன குறித்த கட்டட நுணுக்கங்களை நவீன கட்டடக் கலை பயிற்றுநர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இதற்காக, இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ), தேசிய புரதான இயக்ககம் (என்எஸ்ஏ) ஆகியவற்றின் உதவி கோரப்பட்டுள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai