Enable Javscript for better performance
மோடிக்கு எதிராகஜேஎன்யு மாணவர்கள் இரு நாள் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மோடிக்கு எதிராகஜேஎன்யு மாணவர்கள் இரு நாள் பிரசாரம்

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தர பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக இம் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் அக்பர் செளத்ரி கூறுகையில், "தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாளேடு, இணையதளம் ஆகிய ஊடகங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடியின் பிரசாரம் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மாயத் தோற்றம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, உண்மை நிலையை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, சங்கம் பாரம்பரியமாக கடைப்பிடித்துவரும் மாற்று ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில், அவருக்கு எதிராக மாணவர்கள் குழு வாராணசியில் பிரசாரம் செய்யவுள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai